ஞானஸ்நானம் கொடுக்கும் முறை
யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடி, ‘பாப்டிஸம்’ என்ற பதமானது ‘முழுக்கு’ அல்லது ‘அமிழ்த்து’ என்ற அர்த்தங்கொள்ளும் ‘பாப்டைஸோ’ என்ற கிரேக்க பதத்திலிருந்து வந்ததாகும்.
நாம் ஏற்கனவே கண்டதுபோல யோவான்ஸ்நானன் தன்னால் குணப்பட்டவர்களின் சரீரங்களைத் தண்ணீரில் முழுக்கினான். ‘தண்ணீர் மிகுதியாயிருந்த’ ஓர் இடத்தை அவன் தெரிந்தெடுத்தான். ஏனென்றால் முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கும் அந்த ஊழியத்தைச் செய்ய தண்ணீர் ‘மிகுதியாய்’ அவசியப்பட்டது.
கர்த்தராகிய இயேசுவும் யோவானால் யோரஂதான் நதியில் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றார். அவர் யோர்தான் நதிக்குள் இறங்கினார் என்பதும் ஞானஸ்நானத்துக்குப் பின் தண்ணீரை விட்டுக் கரையேறினார் என்பதும் வெளிப்படையாயிருக்கிறது (மாற்கு 1:9,10). ஞானஸ்நானமானது தண்ணீரில் அடக்கம் பண்ணப்படுவதாகும் என்று பரி. பவுல் போதிக்கிறார். ‘அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்வுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:4). ஒரு மரித்த சரீரத்தின்மேல் ஒரு கைப்பிடி மண்ணைப் போடுவதானது அடக்கம் செய்வது என்று சொல்லப்பட முடியாதது போலவே ஒரு ஆளின் மேல் சில துளி தண்ணீரைத் தெளிப்பதும் ஞானஸ்நானம் என்று அழைக்கப்பட முடியாது. ஆகவே ஞானஸ்நானமானது தண்ணீர் முழுக்குதலின் மூலம்தான் கொடுக்கப்பட வேண்டும்.