ஞானஸ்நானக் கட்டளை
தம்முடைய அப்போஸ்தலரிடம் கர்த்தராகிய இயேசு சொன்ன கடைசி வார்த்தைகளைமத்தேயு 28:18-20 வசனங்களில் படிக்கிறோம். ‘அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,அவரஂகளை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவரஂகளுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவரஂகள் கைக்கொள்ளும்படி அவரஂகளுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்” (மத்தேயு 28:18-20). இப்படிப்பட்ட கட்டளை பெந்தெகொஸ்தே நாள்வரைக்கும் தான் என்று அவர் சொல்லவே இல்லை. அதற்கு மாறாக நாம் இவ்விதம் வாசிக்கிறோம்: “அவர்கள் புறப்பட்டுப் போய்,எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்” (மாற்கு 16:20). நியமிக்கப்பட்ட ஒரு கால வரம்புக்குப்பின் ஞானஸ்நானக் கட்டளையில் ஏதாவது மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று இருந்திருந்தால், அதை குறித்து ஒரு வெளிப்படுத்தல் மூலமாகவோ, ஒரு சொப்பனம் அல்லது தரிசனம் மூலமாகவோ, ஒரு தேவதூதனுடைய ஊழியத்தின் மூலமாகவோ அவர் தமது அப்போஸ்தலருக்குச் சொல்லியிருந்திருப்பார். பிதா, குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று கர்த்தராகிய இயேசு ஆதியில் கொடுத்த கட்டளையைப் பின்பற்றவேண்டும். ஏனென்றால், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ. அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24); “என் உபதேசம் என்னுடையதாரயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்து கொள்ளுவான்” (யோவான் 7:16,17) என்று கர்த்தராகியஇயேசுகூறியிருக்கிறார்.
பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தில் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டும்?
யோவான்ஸ்நானனுடைய ஞானஸ்நானத்தைப் போலல்லாமல் புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானமானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றழைக்கப்படும் அனுபவத்தின் மூலமாக பிதாவையும் குமாரனையும் பரிசுத்த ஆவியையும் பெற்றுக்கொள்ள விசுவாசிகளின் இருதயங்களை ஆயத்தப்படுத்தும் ஒரு படியாகவும் இருந்தது (அப்போஸ்தலர் 2:38). கொர்நேலியு என்ற நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் அப். பேதுரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த வேளையில் அங்கு கூடியிருந்து வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப்போஸ்தலர் 10:44-48). பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக்கொண்டவர்கள் பின்பு தேவனுடைய நீதியை தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதினால் நிறைவேற்றும்படியாக அப். பேதுருவினால் கட்டளையைப் பெற்றுக்கொண்டார்கள். கொர்நேலியுவின் வீட்டிலிருந்தவர்கள் அப். பேதுருவின் மூலமாக சுவிசேஷம் கேட்டபோது பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றது போல சிலர் தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பரிசுத்தஆவியின் வரத்தை பெற்றுக் கொள்கிறவர்களாயிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கொர்நேலியுவின் வீட்டார் தேவனுடைய நீதியாகிய தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக கட்டளையைப் பெற்றுக்கொண்டது போல தங்களுக்கும் அதுபோன்ற கட்டளை காணப்படுகிறது என்பதை அறிந்து தண்ணீர் ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லாரும் சுவிசேஷத்தைக் கேட்கும்போது பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே அப். பேதுரு அப்போஸ்தலர் 2:38-ல் குறிப்பிட்டிருப்பதைப் போல பரிசுத்த ஆவியின் வரத்தை (பரிசுத்த ஆவியின் நிறைவை) பெற்றுக்கொள்வதற்கு தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுக்காமல் இருப்பது தடையாக இருக்கக்கூடாது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் (பரிசுத்த ஆவியின் நிறைவு) குறித்து கரஂத்தராகிய இயேசு கூறியபொழுது, பிதா குமாரன் பரிசுத்தாவியானவராகிய மூவரும், இந்தப் பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டவரஂகளின் உள்ளே வந்து வாசம்பண்ணுவதாய் கூறினார். இவ்விஷயத்தைக் குறித்த அவருடைய வார்த்தைகளையே நாம் படிக்கலாம்: “நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவரஂ உங்களுக்குத் தந்தருளுவார்.” ‘நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே (தேற்றரவாளன் வாசம்பண்ணும்படியாய் வரும் அந்த நாளிலே) நீங்கள் அறிவீர்கள்” (யோவான் 14:16,20). ‘நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (யோவான் 14:23).
கரஂத்தராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது பிதாவின் பிரசன்னத்தையும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தையும் நாம் காண்கிறோம். “இவரஂ என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று சொல்லி இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின்போது பிதா சாட்சி கொடுத்தார். அவ்வேளையில்,பரிசுத்த ஆவியானவரஂ புறாவைப்போல ரூபங்கொண்டு அவரஂ மேல் வந்திறங்கினார் (மத்தேயு 3:16,17).
ஆகையினாலே புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானமானது பிதா, குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தில் கொடுப்பது சாலச் சிறந்தது.
‘கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்” (II யோவான் 9-11); “பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து” (I யோவான் 2:22) என்று அப். யோவான் கூறுகிறார்.