ஞானஸ்நானத்தில் சம்பவிப்பது என்ன?
முழுக்கு ஞானஸ்நானத்தை ஆதரிக்கிறவரஂகள், இப்படிப்பட்ட ஞானஸ்நானம் கீழ்படிதலின் ஒரு கிரியை மட்டுமே என்றும், அது கிறிஸ்துவிலுள்ள தனது விசுவாசத்தின் மூலமாய் ஒரு விசுவாசி தன் இருதயத்தில் அனுபவிக்கும் உள்ளான மாற்றத்தின் புறம்பான அடையாளம் என்றும் சொல்லுகிறாரஂகள். இது முற்றிலும் சரியானதல்ல. மறுபடியும் பிறந்த ஒரு விசுவாசி உண்மையாகவே தன் புதிய அனுபவங்களைக் குறித்துச் சந்தோஷமாயிருப்பான் என்பது அங்கீகரிக்கப்படத்தக்கதே. என்றாலும் ஞானஸ்நானமானது நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிற ஒரு செயலும் அடையாளமுமாய் இருப்பதுடன், நமக்குப் புதிய ஆசீர்வாதங்களையும் கொண்டுவருகிறது. மேலும் ஒரு மேலான அனுபவத்துக்கும், ஆழமான ஆவிக்குரிய ஜீவயத்துக்கும் அது நம்மை ஆயத்தப்படுத்துகிறது. புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானத்தில் நாம் அடையும் பயன்களைக் கீழே பார்ப்போம்.
1. தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க ஞானஸ்நானம் ஒரு படியாகும்.
ஒரு ‘பிறப்பு’ என்று கிறிஸ்து குறிப்பிடுகிறதான தண்ணீர் ஞானஸ்நானம், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க ஒரு அத்தியாவசியமான படியாக இருக்கிறது. “இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 3:5).
2. தண்ணீர் ஞானஸ்நானத்தில் நாம் பாவ சுபாவத்திற்கு மரிக்கிறோம்.
ஒரு மனுஷன் மறுபடியும் பிறந்திருந்தாலும் அவன் இன்னும் பாவ சுபாவத்திலிருந்து - “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கரஂப்பந்தரித்தாள்” (சங்கீதம் 51:5) என்று தாவீது குறிப்பிடுகிற கீழ்ப்படியாமை, முரட்டாட்டம் முதலிய இயல்பாகவே உள்ள ஆதாமின் சுபாவத்தினின்று - விடுதலையில்லாதவனாகவேயிருக்கிறான். “ஒரே மனுஷனுடைய (ஆதாமுடைய) கீழ்ப்படியாமையினாலே அநேகரஂ பாவிகளாக்கப்பட்டதுபோல” என்று பரி. பவுல்கூறுகிறார் (ரோமர் 5:19). இந்த வசனமானது ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் இருக்கிற பாவசுபாவத்தையே குறிக்கிறது.
ஞானஸ்நானத்தின் ஆழமான சத்தியத்தை தேவனிடத்திலிருந்து வெளிப்படுத்தலாகப் பெற்ற அப்.பவுல், இஸ்ரவேல் புத்திரரஂ செங்கடலைக் கடந்த சம்பவத்தை ஞானஸ்நானத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். அதில் மறைந்துள்ள வெளிப்படுத்தலின் ஆழத்தைக் காணும்போது, அது நம்மை பிரமிக்கச் செய்கிறது. “இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேணடுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.” என்று அவரஂ கூறுகிறார் (I கொரிந்தியர் 10:1,2).
இஸ்ரவேல் புத்திரரஂ எகிப்திலிருந்து பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார்கள் (யாத்திராகமம் 12:27). ஆனாலும் அவரஂகளைப் பின்தொடரஂந்து வந்ததான பார்வோனின் சேனைகளிலிருந்து அவரஂகளுக்கு இன்னொரு விடுதலை தேவையாயிருந்தது (யாத்திராகமம் 14:9,10).
இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரும்படி பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட அன்று இராத்திரியிலே மிகப் பெரிய அற்புதம் செய்த தேவன், மறுபடியும் அதற்குச் சமமான இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்த வேண்டியிருந்தது. இந்த முறை எகிப்திலிருந்து விடுவிப்பதற்கல்ல அவரஂகளைத் தொடரஂந்து வந்த எகிப்திய சேனையிலிருந்து விடுவிப்பதற்காகவே அவரஂ அந்த அற்புதம் நடத்த வேண்டியாதாயிருந்தது. மோசே, அவரஂகளைப் பார்த்து, “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கரஂத்தரஂ உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்” என்று சொன்னான் (யாத்திராகமம் 14:13). தேவன் அவரஂகளுக்கு இரண்டாவது இரட்சிப்பை வாக்குப்பண்ணினார். அது சிவந்த சமுத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த இரட்சிப்பு எகிப்தியரை முழுவதும் அழித்து இஸ்ரவேல் புத்திரருக்குப் பூரண விடுதலையைக் கொண்டு வந்தது.
அவ்வண்ணமே மறுபடியும் பிறந்த ஒரு விசுவாசி,கல்வாரியில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக பாவத்தின் ஆளுகையிலிருந்து (ஆவிக்குரிய பிரகாரம் எகிப்திலிருந்து) தனக்குக் கிடைக்கப் பெற்ற விடுதலையை நிச்சயமாகவே அனுபவித்துக் கொண்டியிருக்கிறான். ஆனால் தண்ணீர் ஞானஸ்நானத்திலே,தொடரஂந்து வரும் எகிப்தின் சேனையைப்போல தனக்குள்ளே யுத்தம் செய்கிற பாவ சுபாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுதலாகிய இன்னொரு அற்புதமான இரட்சிப்பை அவன் அனுபவிக்கிறான். அந்த பாவ சுபாவம் அவனோடு போராடிக் கொண்டிருந்தது. அது இஸ்ரவேலரைப் பின்தொடரஂந்த எகிப்தியரின் சேனைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. ஆகையால் ஞானஸ்நானத்தில் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டிய இன்னொரு இரட்சிப்பு உண்டு. ஆகவே தான், “விசுவாசமுள்ளவானாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” என்று கரஂத்தராகிய இயேசு சொன்னார் (மாற்கு 16:16).
ஞானஸ்நானத்தில் அடங்கியுள்ள இரட்சிப்பின் இரகசியத்தை அப். பேதுரு வெளிப்படுத்தும்போது அவரஂ அதை எட்டுப் பேரஂகள் மாத்திரமே இரட்சிக்கப்பட்ட நோவா காலத்து பிரளயத்தோடு ஒப்பிடுகிறார். நோவாவின் சந்ததியில் பாவிகளை அழிக்க தேவன் தாம் வரப்பண்ணின அதே ஜலப்பிரளயத்திலிருந்துதான் நோவாயையும் அவன் குடும்பத்தினரையும்காப்பாற்றினார். எனவே, “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, (மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து), இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது” என்று அப். பேதுரு உறுதியாய்க் கூறுகிறார் (I பேதுரு 3:21).
3. பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்தும் ஒரு படியே ஞானஸ்நானம் ஆகும்.
பாவசுபாவம் நீக்கப்படுவது பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாயிருக்கிறது. அதன் காரணம் தெளிவாக இருக்கிறது. பரிசுத்தாவியானவரஂ நமக்குள்ளே வாசம்பண்ணும்படியாய் மட்டுமல்ல, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்தி, நம்மை முற்றிலும் பரிசுத்தப்படுத்தி, அவரது பூரண சித்தத்தை நாம் செய்ய நமக்குப் போதித்து, நம்மை இவ்விதமாய் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவரும்படியாகவும் வருகிறார் (யோவான் 16:13; ரோமர் 8:13,14; I பேதுரு 1:2). முரட்டாட்டமும் கீழ்ப்படியாமையும் எங்கே உண்டோ அங்கே பரிசுத்தாவியானவரஂ இந்தப் பரிசுத்தமாகுதலின் கிரியையைச் செய்ய முடியாது. ஒன்று பாவசுபாவம் நம்மை ஆளுகை செய்ய வேண்டும் அல்லது பரிசுத்த ஆவியானவரஂ ஆளுகை செய்ய வேண்டும். ஞானஸ்நானத்தில் பாவ சுபாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டவரஂகள்,பரிசுத்தாவியானவரால் நடத்தப்பட்டு, புதிதான ஜீவனுள்ளவரஂகளாய் நடந்துகொள்ளும்படிக்கு பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ளும்படியாக சரீரத்திலும் ஆத்துமாவிலும் ஆவியிலும் ஆயத்தம்பண்ணப்படுகின்றனரஂ. ஆகவேதான் அப். பேதுருவும், ‘மனந்திரும்பி’, “ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றார் (அப்போஸ்தலர் 2:38).
4. தேவனுடைய வசனத்தின் மூலமாக வரும் பரிசுத்தமாகுதல் ஞானஸ்நானத்தில் துவங்குகிறது.
முரட்டாட்டமும் கீழ்படியாமையுமான ஆதாமின் சுபாவம் தேவ சித்தத்திற்கு எதிரிடையாயிருக்கிறது. தேவசித்தித்ததிற்கு விரோதமாய்ப் பாவசுபாவத்தின் முரட்டாட்டத்தைக் குறித்து அப். பவுலின் அறிக்கையை நாம் காண்போம். “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் (தேவசித்தத்தின்) மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு (தேவனுடைய பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவதில் பிரியப்படுகிற பிரமாணத்துக்கு) விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது” (ரோமர் 7:22,23). தேவனுடைய பிரமாணத்தில் அல்லது தேவனுடைய வசனத்தில் வாஞ்சையாயிருக்க பவுல் விரும்பியும் அவருடைய உள்ளான வாஞ்சைகளுக்கு விரோதமாய் அவருக்குள்ளிருந்த ஆதாமின் பாவ சுபாவமானது அதை எதிர்த்து நின்று அவருடைய ஜீவியத்தில் தோல்வியைக் கொண்டு வந்தது.
ஞானஸ்நானத்தில் கரஂத்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒரு செய்கையினால் முதல் மனுஷனாகிய ஆதாம் ஏதேன் தோட்டத்தில் காண்பித்த கீழ்ப்படியாமையாகிய செயலை நாம் பலனற்றதாய் மாற்றி விடுகிறோம். அவன் மூலமாகவே அவனது சுபாவமாகிய கீழ்ப்படியாமையை நாம் நம்முடையதாக்கிக் கொண்டோம். எனினும் நாம் கிறிஸ்துவின் மரணத்தில் பங்கு கொள்ளும் அனுபவமாகிய ஞானஸ்நானத்தின் மூலமாக தேவசித்தத்தைப் பரிபூரணமாகச் செய்த கிறிஸ்துவின் சித்தத்தில் பங்குபெறுகிறோம். ஆகையால் அப்.பவுல், “இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் (தேவசித்தத்தைப் பூரணமாய் செய்த) சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார் (எபிரெயர் 10:10). “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்” என்று சொன்னபோது தேவசித்தத்துக்குப் பூரணமாய்க் கீழ்ப்படிந்த கிறிஸ்துவின் சித்தமானது தண்ணீர் ஞானஸ்நானத்தில் நமது சுபாவமாகிவிட்டது. தண்ணீர் ஞானஸ்நானத்துக்குப் பிற்பாடு தேவசித்தத்தை வெளிப்படுத்துகிறதான வேதவசனத்தில் பிரியமாயிருக்கும்படி புதிய கிருபையை நாம் கண்டடைகிறோம். அதற்குப் பின்பு தேவனுடைய வசனமானது நம்மைப் பரிசுத்தப்படுத்த ஆரம்பிக்கிறது.
5. ஞானஸ்நானத்தில் ஜெயஜீவியத்திற்கான ஒரு திடஅஸ்திபாரம் உருவாக்கப்படுகிறது.
மனந்திரும்புதலில் பாவத்தின் ஆளுகையிலிருந்தும் தண்ணீர் ஞானஸ்நானத்தில் முரட்டாட்டமான பாவசுபாவத்திலிருந்தும் நாம் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அது ஜெயஜீவியம் அல்ல. பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஜெயஜீவியம் செய்வது முற்றிலும் சாத்தியமானது என்ற இடத்துக்கு ஞானஸ்நானமானது நம்மைக் கொண்டு வருகிறது. இஸ்ரவேல் புத்திரரஂ எகிப்திலிருந்தும் அவரஂகளைத் தொடரஂந்து வந்த எகிப்திய சேனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதோடு தேவன் திருப்திப்படவில்லை. எகிப்தில் அடிமைகளாயிருந்த இவரஂகளை வனாந்தரத்தில் படிப்படியாய் சோதித்து ஒரு பலத்த சேனையாக்கி,இவரஂகள் கானான் தேசத்தின் சகல ஜாதிகளுடனும் யுத்தம்பண்ணிஅவரஂகளை ஜெயித்து கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமென்பதே இவரஂகளைக் குறித்த தேவனுடைய மேலான நோக்கமாயிருந்தது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம், நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கும் தேவ அன்பினால் சகலவித பரிட்சைகளையும் சோதனைகளையும் நாம் ஜெயித்து,[“நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவரஂகளாயிருக்கிறோமே” (ரோமர் 8:37)] பரலோகராஜ்யத்தின் மேன்மையான சுதந்திரமாகிய புதிய எருசலேமை அல்லது சீயோனை அடையவேண்டும். “இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 3:6).
6. சபை எடுத்துக்கொள்ளப்படும் வேளையில் சரீரம் உயிர்த்தெழுவதற்கு (மறுரூபமடைவதற்கு) ஞானஸ்நானம் ஒரு அத்தியாவசியமான படியாகும்.
“ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவரஂகளானால், அவரஂ உயிர்த்தெழுதலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமர் 6:5). மூல கிரேக்கப் பிரதியில் ‘உயிர்த்தெழுதலின் சாயல்’ என்பது இல்லை. நாம் உண்மையாகவே அடக்கம் பண்ணப்படுவதற்கு ஞானஸ்நானம் எத்தனமாயிருப்பதாக தேவன் அங்கீகரிக்கிறார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய தற்போதைய சரீரம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எழுத்தின்படியே உயிர்த்தெழுவதற்காக பரிசுத்தாவியால் குறிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.