ஞானஸ்நானத்தில் உள்ள வல்லமை
‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; ... (ஏனெனில்) இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” என்று பரி.பவுல் கூறுகிறார் (ரோமர் 1:16). மனுஷரஂ தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிப்பது கடைசிக்கால அடையாளங்களில் ஒன்றாகும் (II தீமோத்தேயு 3:5). சதுசேயரஂ, வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுவதாக கரஂத்தராகிய இயேசு குறிப்பிட்டார் (மத்தேயு 22:29).
நாம் ஞானஸ்நானம் பெற்றபோது, நமக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்திருக்கலாம் (ரோமர் 6:17). எனினும் நாம் நீதியின் வசனத்தில் அனதினமும் பழகுவதின் மூலம் (எபிரெயர் 5:13) இந்த உபதேசத்திலுள்ள வல்லமையைக் கண்டுணரஂவது மிகவும் அவசியம்.
பாவிகளும், ஞானஸ்நானம் பெறாதவரஂகளும் பாவசரீரம் (ரோமர் 6:6) என அழைக்கப்படும் ஒரு சரீரத்தையே உடையவகளாக இருக்கின்றனரஂ. பரி. பவுல் அப்படிப்பட்ட சரீரத்தை ஒரு ‘மரணசரீரம்’ என்றும் அழைக்கிறார் (ரோமர் 7:24). அப்படிப்பட்ட ஒரு சரீரத்தின் அவயவங்களில் பாவ இச்சையானது, ஒரு பிரமாணத்தைப் போன்று கிரியை செய்கிறது (ரோமர் 7:5). அது தேவனுடைய பிரமாணத்திற்கு விரோதமாகப் போராடி, பாவம், மரணம் ஆகியவற்றின் பிரமாணத்திற்கு மனிதனைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. (ரோமர் 7:22,23). அப்படிப்பட்ட ஒரு மனிதன் தனது சரீரத்தையும் அதின் அவயவங்களையும் அசுத்தத்திற்கும் துர்க்கிரியைகளுக்கும் ஒப்புவித்து, பாவத்திற்கு ஊழியம் செய்து, மரணத்திற்கேதுவான கனிகளைக் கொடுக்கிறான். இந்தத் துர்க்கிரியைகளின் மூலம் அவன் தனது மனதிலே தேவனுக்குச் சத்துருவாக மாறிவிடுகிறான் (கொலோசெயர் 1:21). இத்தகைய ஒரு பாவி உண்மையாக மனந்திரும்பி, தனது பாவங்களைத் தேவனிடம் அறிக்கையிடும்போது, அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கழுவப்படுகின்றன. ஒரு காலத்தில் தனது மனதும் மாம்சமும் விரும்பினவற்றையெல்லாம் தனது சரீரத்தில் நிறைவேற்றிக் கொண்டிருந்த அவனது பழைய மனுஷன் இப்போது கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டு விடுகிறான்.
கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தில் அவரோடுகூட அடக்கம்பண்ணப்படுவதின் மூலம், நாம் பாவத்திற்கு (பாவ சுபாவத்திற்கு) மரித்து, அதன் வல்லமையிலிருந்து விடுவிடுக்கப்படுகிறோம் (ரோமர் 6:2,3,7). அதற்குப் பின் நாம் நம்மைப் பாவத்திற்கு மரித்தவரஂகளாக எண்ணிக் கொண்டிருக்கும் காலம் வரை, இச்சுபாவமானது நமது மாம்சத்தில் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதாகவே இருக்கும் (ரோமர் 6:11, 8:3). இவ்வாறு நாம் ஒரு பக்கத்தில் கிறிஸ்துவோடுகூட மரித்தவரஂகளாக இருக்கும்போதே, மறுபக்கத்தில், தேவ சித்தத்தைப் பரிபூரணமாகச் செய்த கிறிஸ்துவின் சித்தத்தில் பங்கு பெற்று புதிய சரீரத்தையும்உடையவரஂகளாகக் காணப்படும்படியாக அவருக்குள் நீதிக்கென்று பிழைத்திருப்போம். “ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர் ... தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்” என்று கரஂத்தராகிய இயேசு கூறினார் (எபிரெயர் 10:5,7).
இப்படிப்பட்ட ஒரு சரீரத்தை உடையவரஂகளாகிய நாம் மீண்டும் நமது அவயவங்களை அநீதிக்கு ஒப்புவிக்கவோ, இப்பிரபஞ்சத்தின் வேஷத்தைத் தரிக்கவோ முற்படாமல், அதை ஒவ்வொரு நாளும் தேவனுக்குப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அப்போது தேவனுடைய வசனத்தின் மூலம் அவரது பரிபூரண சித்தத்தை நாம் அறிந்து கொள்ளத்தக்கதாக அவரஂ நமது மனதைப் புதிதாக்குவார். நாம் மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவரஂகளாக, நமது அவயவங்களை, நீதிக்குரிய ஆயதங்களாகப் பரிசுத்தாவியானவருக்குத் தொடரஂந்து ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோமர் 6:13). நாம் இதனை நடைமுறையில் பயிற்சிக்கும்போது, பழைய மனுஷனுக்கும் பாவசரீரத்திற்கும் சொந்தமானவை அனைத்தும் நம்மை விட்டு ஒழிந்துபோகும்படி நாம் எவ்வாறு கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்படுகிறோமோ (மூழ்கி விடுகிறோமோ) அவ்வாறே அனைத்தும் புதிதாகும்படியும், நாம் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகும்படிக்கும்,பரிசுத்த ஆவிக்குள் அபிஷேகம் பண்ணப்பட (மூழ்கி விடவும்) முடியும் (II கொரிந்தியர் 5:17). அப்போது பாவம், வியாதி, மரணம் ஆகியவை நமது சரீரத்தை ஆண்டு கொள்ள முடியாது. பாவம், வியாதி, மரணம், பிசாசு ஆகியவற்றை நாம் எதிர்த்து தொடரஂந்து போராடத்தக்கதாக, நமது சரீரத்தின் அவயவங்களை உயிர்த்தெழுதலின் வல்லமையினால் தேவன் புதியதாகச் சிருஷ்டிக்கிறார். எனவேதான், “ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். ... என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என்று அப்.பவுல் கூறுகிறார் (I கொரிந்தியர் 9:26,27).
ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான் (II தீமோத்தேயு 2:5). விசுவாசிகளின் ஞானஸ்நானம் என்பது மதமாற்றம் செய்யும் சடங்கு அல்ல. ஞானஸ்நானம் ஒருவனை கிறிஸ்தவனாக மாற்றும் அனுசாரமல்ல. ஏற்கனவே இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்ற விசுவாசிக்கே ஞானஸ்நானம் கொடுப்பது வேத ஒழுங்கு. ஞானஸ்நானம் பொருளற்ற ஓர் செயலுமல்ல. இதுஒருவிலையேறபஂபெறஂறசதஂதியமாயிருகஂகிறது. ஞானஸ்நானம் எடுப்பதின் மூலம் ஒருவர் தன்னைக் கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலோடு இணைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:4). திரித்துவத்தில் ஒருவரான இயேசு மனிதனாய் அவதரித்ததினிமித்தம் நமக்கு முன்மாதிரியாக ஞானஸ்நானம் பெற்றார். எனவே நாம் தேவபக்தியின் பயிற்சியில் தொடரஂந்து பழகி, மகிமையின்மேல் மகிமையடைந்து, ஜெயத்தின்மேல் ஜெயம் பெற்று,பூரணத்தை நோக்கிக் கடந்து செல்வோமாக.